அரச சாரா அமைப்புகளின்

                           செயற்பாடுகள்

                                       ROLE OF NGOs

                                                                                  By. S.Niginthan

01. அபிவிருத்தியும், உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும்

 Development and Operation of Infrastructure      

இத் திட்டத்தினை அமுல் படுத்தும் வாய்ப்புக்களை அங்குள்ள CBO s and Cooperatives  களே    பெற்றுக்கொண்டு செயற்பட்டு வருகின்றன. அதாவது நிலங்கள், வீடு, கிணறு கட்டுதல் , சிறு   வீதிகள் அமைத்தல் , புனரமைத்தல். பொது மல கூடங்கள் அமைத்தல் போன்ற செயற்பாடுகள்    மற்றுமன்றி கட்டிடப் பொருட்கள் வழங்குநர்களாகவும் தொழிற்பட வாய்ப்புக்கள்  கிடைக்கின்றன.

மேலும் பல சமயங்களில் அவர்கள் திட்டத்தை அமுல் படுத்த (technical assistance) தொழில் நுட்ப உதவிகளும் , ஆலோசனைகளும்                governmental agencies or higher-level NGOs  களிடமிருந்து எதிர்பார்க்கப் படுகின்றன.

 

02. புதிய விடயங்களை அறிமுகப்படுத்துதல்

Supporting innovation, Demonstration and Pilot Projects

 புத்தாக்க (Innovative projects)   திட்டங்களை அமுல்படுத்த ஏற்ற இடங்களை தெரிவு செய்வது மட்டுமல்லாமல் திட்டகாலத்தையும் கவனத்திற் கொண்டு  செயலாற்றுகின்றன .

மேலும் அரசால் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய திட்டங்களுக்கான (pilot projects) மாதிரிகளை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் தம்மை ஈடு படுத்திக் கொள்கின்றன.

 

03. தொடர்பாடல்

Facilitating Communication

NGOs மக்களோடு ஒரு நல்லுறவு நிலையில் (inter personal methods of communication) செயற்படவே விரும்புகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் மக்களின் தேவைகளை அரசாங்கத்திற்கும் , அரசாங்கத்தின் திட்டங்கள், செயற்பாடுகளை மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியையும் மேற்கொள்கின்றன.

சக  NGOs களுடன் நல்ல தொடர்பாடல்  மேற்கொள்ள கட்டாயப்படுத்தப் படுகின்றன.

                                     

04. தொழில் நுட்ப உதவிகளும் பயிற்சிகளும்

Technical Assistance and Training

NGOs தொழில் நுட்ப உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்குவதன் மூலமாக CBOs மற்றும் அரச துறைகளின் திறனை மேம்படுத்தி அபிவிருத்திக்கு பெரிதும் உதவுகின்றன.

 

 05. ஆய்வு, கண்காணிப்பும் மீளாய்வும்

Research, Monitoring and Evaluation

Innovative activities புத்தாக்க செயற்பாடுகள் சரியான முறையிலும், மிகவும் கவனமாகவும் ஆவணப் படுத்தப் பட்டு சம்மந்தப்பட்ட பிரிவுகளுக்கு வழங்கப் படுகின்றன. திட்ட அமுலாக்கத்தின் பொது பங்கேற்புடனான கண்கானிப்பானது (participatory monitoring)  மக்கள் Project Staffs உடன் மாற்றங்களை (results) பகிர்ந்து கொள்ளுவதற்கு உகந்த ஒரு செயற்பாடாக அமைகிறதென்பது குறிப்பிடத் தக்கது