TYPES OF NGOs

அரச சாரா அமைப்புகளின் வகைகள்

                              

                                            By. S.Niginthan

 அமைப்புகளின் நோக்கங்களையும் , அவைகளின் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே இவ்வமைப்புக்கள் வகைப் படுத்தப் படுகின்றன .

 01. Charitable Orientation

உணவு , உடை,மருந்து , வீடு , போக்கு வரத்து  மற்றும் பாடசாலை போன்ற அடிப்படைத் தேவைகளை கவனத்திற் கொண்டு செயற்படும் அமைப்புகளாகும் . இவ்வமைப்புக்கள் இயற்கை அனர்த்தங்களின் போதும் மற்றும் போர் நேரங்களின் போதும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன .

02. Service Orientation

சுகாதார வசதிகள் , குடும்பத்திட்டம் , கல்வி வசதிகள் போன்ற சேவைகளில் பங்கெடுக்கும் NGOs இவற்றுள் அடங்கும். திட்ட அமூலாக்களின் போதும் , சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போதும் மக்களின் பங்களிப்புகள் இங்கே எதிர்பார்க்கப் படுகின்றன.

03. Participatory Orientation

இவ்வமைப்புக்கள் self-help projects மூலமாகவே வகைப் படுத்தப் படுகின்றன .

அதாவது மனித வளம் , நிலம் ,பொருட்கள் ,கருவிகள், சாதனங்கள் , பணம் போன்றன வழங்கப்பட்டு உள்ளூர் மக்களால் அமுலாக்கப் படும் திட்டம்.  Cooperatives இவற்றுள் அடங்கும். 

04.      Empowering Orientation

சமூக , அரசியல் , பொருளாதாரத் துறைகள் அம்மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களை  தெளிவாக அவர்களுக்கு புரிய வைக்க உதவுவதோடு மட்டுமல்லாது , அம்மக்கள் வாழ்க்கையை  வளம்படுத்த அவர்களிடத்தே காணப்படும் வளங்கள் மற்றும் வாய்ப்புக்கள்;(potential) பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற அமைப்புக்களாகும்.

 

 

    செயற்பாடுகளின் நிலையில் அரச சாரா

                     அமைப்புகளின் வகைகள்

       NGO Types by level of operation

 

01. Community-based Organizations (CBOs)

இவ்வாறான சமூக மட்ட அமைப்புகள் அம்மக்களின் சொந்த முயற்சியினாலேயே  தோன்றுகின்றன. விளையாட்டுக் கழகங்கள்,பெண்கள் அமைப்புக்கள், சமய , கல்வி அமைப்புக்கள் போன்றன இவற்றுள் அடங்கும். 

இவைகளில்  NGOs களின் அல்லது சர்வதேச நிருவணங்கள் , இணைந்து செயற்படும் அமைப்புக்கள் (bilateral) ,அன்பளிப்புக நன்கொடைகளின் உதவிகள் மூலம் செயற்படும் அமைப்புக்களும் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. 

சில  அமைப்புக்கள் மக்களிடம்  காணப்படும் வளங்கள் மற்றும் வாய்ப்புக்கள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் , அவர்களின் தேவைகளை இனங்கண்டு அதற்க்கான சேவைகளை பெற்றுக் கொடுப்பதிலும் தம்மை அர்ப்பணித்து செயற்படுகின்றன.

 02. Citywide Organizations

     லயன்ஸ், மற்றும் ரோட்ரிக் கழகங்கள் , சமய சமூக அமைப்புக்கள் வியாபார ஸ்தாபனங்கள்  மற்றும் chambers of commerce and industry, coalitions of  business   இவ்வாறான அமைப்புக்களும் மக்களின் ஒரு சில தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

    03. National NGOs

Red Cross, YMHAs,YMCAs/YWCAs போன்ற அமைப்புக்கள் .இவ்வாறான அமைப்புக்கள் மாகான , மாவட்ட மட்டங்களில் தமது கிளைகளை அமைத்து செயற்படுகின்றன. பெரும்பாலும் உள்ளூர் அமைப்புகளுக்கே இவை உதவுகின்றன.

04. International NGOs

Save the Children organizations, OXFAM, CARE போன்ற அமைப்புக்கள் .இவ்வாறான அமைப்புக்கள் உள்ளூர் அமைப்புகளுக்கும், திட்டங்களுக்கும் நிதி வழங்கும் நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றன.